tamilnadu

img

சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியை மூடும் நடவடிக்கையை கைவிடுக ஜவுளித்துறை அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடிதம்

கோவை, மார்ச் 15 –  கோவையில் மத்திய ஜவுளித்துறை யின் கீழ் இயங்கி வரும் சர்தார்  வல்லபாய் படேல் கல்லூரியை மூட  நடவடிக்கை மேற்கொள்ளப்படுவ தாக தெரிகிறது. இதனைக் கைவிட்டு  தமிழ்நாட்டின்  சி.யு.டி.என் எனப்படும்  மத்திய பல்கலைகழகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிதிராணி அவர்களுக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பி.ஆர்.நடராஜன்  எம்பி எழுதியுள்ள கடிதத்தில்  கூறியிருப்பதாவது, கோவை நகரம்  தென்னிந்தியாவின் மான்செஸ்டர்  எனபடும் ஜவுளித் தொழிலுக்கு பெயர்  பெற்றதாகும். இந்நகரத்தில், சர்தார்  வல்லபாய்படேல் இன்டர்நேஷ னல் ஸ்கூல் ஆஃப் டெக்ஸ்டைல்ஸ்  அண்ட் மேனேஜ்மென்ட் செயல்பட்டு  வருகிறது. இது ஜவுளி அமைச்சகத்தின்  கீழ் வருகின்ற ஒரு தன்னாட்சி கல்வி  நிறுவனம். இதற்கு அகில இந்திய  தொழில்நுட்பக்கல்வி கவுன்சில்  ஒப்புதல் அளித்தது. இந்நிறுவனம்  திருவாரூரில் உள்ள தமிழக மத்திய பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.  அதில் 2016-17 ஆம் ஆண்டு முதல்  ஜவுளித்தொழிலுடன் இணைக்கப் பட்ட பல்வேறு ஜவுளிக் கல்வியான  பி.எஸ்சி டெக்ஸ்டைல், இரண்டு ஆண்டுகள் முழுநேர முது கலை டிப்ளோமா இன்மேனேஜ் மென்ட் (பிஜிடிஎம்) மற்றும் எம்பிஏ படிப்புகளை வழங்குகிறது.  இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேல் டெக்ஸ்டைல்ஸ் கல்லூரியின்  நிர்வாகம், மத்திய பல்கலைக்கழகம் (சி.யு.டி.என்) திருவாரூருடன் இணைக்கப்படும் என்று அளித்த உத்தரவாதத்தின் பேரில், மாண வர்கள் பலர் இங்கு சேர்ந்தனர். இது தமிழகத்தில் உள்ள பலவகையான ஜவுளி தொடர்பானப் படிப்புகளை ஊக்குவிக்கிறது.  இதனிடையே, சி.யு.டி.என் திரு வாரூருடன் இக்கல்லூரி இணைவதற் கான பணிகளை ஜவுளி அமைச்சகம் உறுதிசெய்யப்பட்டபடி நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதனால், இதனைக் கண்டித்து மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக இரண்டு வாரங்களாக வகுப்பு களை புறக்கணித்து போராடி வருகின் றனர்.  மேலும், மாணவர்களைச் சந்தித்து  மத்திய பல்கலைக்கழகமான திருவாரூ ருடன் இணைப்பின் நிலையை தெரிவிக்க நிர்வாகம் தயாராகவும் இல்லை. இதுகுறித்து ஜவுளி அமைச்ச கத்தின் செயலாளரை சந்தித்து, கேள்வி  கேட்க கல்லூரி மாணவர்களுக்கு அனு மதியும் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக இக்கல்லூரி நிர்வாகம் மத்திய பல்கலைக்கழகத்திற்கு இடையி லான இணைப்பு ரத்து செய்யப்பட்ட தாக பெற்றோருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளது.  இந்நிலையில் சர்வதேச அளவி லான ஜவுளி கல்வியைக் கொண்ட அரசு நிறுவனம் மூடப்பட்டு, இந்த  இளநிலை,முதுநிலை படிப்புகளுக் கான தற்போதைய சேர்க்கையை  நிறுத்துவதன் மூலம் மேம்பட்ட  ஜவுளி ஆராய்ச்சி மையமாக மாற்றப் படும் என்று கூறப்படுகிறது. இது  தற்போது பயில்கின்ற மாணவர்க ளின் எதிர்காலத்தை கேள்விகுறியாக் கும் மேலும்,தற்போதுள்ள அனுபவ  ஆசிரியர்கள் வெளியே அனுப்பப்படு வர். படிப்புக்காக பல லட்சம் ரூபாய்  செலவழித்தும் படிப்பிற்குத் தகுந்த வேலைவாய்ப்பை பெறவே முடியாத சூழல் உருவாகும்.  பொதுவாக, உலகெங்கிலும், கல்வியை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக கல்வி நிறுவனங்களுக்குள் ஆராய்ச்சி மையங்கள் தொடங்கப்படுகின்றன. இதை இக்கல்லூரியிலும் துவங்கி னால் மாணவர்களின் கண்டுபிடிப்பு கள் இத்துறையில் ஏராளமாக  வெளிக்கொணரப்படும். இவ்வாறாக  ஜவுளித்துறையின் பல திட்டங்கள்  மற்றும் ஜவுளி தொடர்பான மேம்பட்ட பல்லாய்வுகள் மூலம் ஜவுளித்துறையை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள மற்றும் தமிழ்நாட்டில் ஜவுளி தொடர் பான படிப்புகளை வழங்கும் ஒரே கல்லூரியான இக்கல்லூரியை மூடுவ தற்கு எந்தவிதமான சரியான காரண மும் தெளிவாக குறிப்பிடப்ப டவில்லை.  எனவே, சர்தார் வல்லபாய்படேல் கல்லூரியை சி.யு.டி.என் உடன் இணைத்து ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கவேண்டும். இந்தக் கோரிக்கை குறித்து மத்திய அமைச் சர் தனது தனிப்பட்ட கவனம் செலுத்தி னால், மாணவர்கள் அனைவரின் எதிர்காலம் சிறப்பாக அமையும்  என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

;