tamilnadu

கோவை அரசு மருத்துவமனை முதல்வரிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

கோவை, ஜூன் 28- கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரை அவதூ றாகப் பேசி பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகனிடம் மனித உரிமைகள் ஆணையம் வெள்ளி யன்று விசாரணை நடத்தியது.  கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தலைமை மருத்துவராக கஜேந்திரன் நியமிக் கப்பட்டிருந்தார். அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல் வர் அசோகன் விபத்து பிரிவுக்கு மாற்றி னார். அவசர சிகிச்சைப் பிரிவிற்கு இவரை விட ஜூனியரை பணியமர்த் தியதால், மீண்டும் தன்னை அவசரப் பிரிவிற்கு மாற்ற வேண்டும் என முதல் வர் அசோகனிடம் கஜேந்திரன் விண்ணப்பித்தார். அப்போது, முதல் வர் அசோகன் அதை நிராகரித்ததோடு, கஜேந்திரனை அவதூறாக பேசிய தாக கூறப்படுகிறது.  இதன்பின் முதல்வர் அசோகன் இந்திய மருத்துவ ஆணையத்திடம் புகார் அளித்து, கஜேந்திரனை இட மாறுதல் செய்துள்ளார். மேலும் அவ ரது பணியிடத்திற்கு வேறு மருத்து வரை நியமித்துள்ளார். இதனால், கடந்த 8 மாதங்களாக பணியிடம் இன்றி மருத்துவர் கஜேந்திரன் இருந் துள்ளார். இந்நிலையில் தன்னை அவதூறாக பேசியதோடு, பழி வாங் கும் நோக்கில் செயல்பட்ட அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கஜேந்திரன் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் இரு தரப்பினரிடமும் தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர், இவ்வழக்கின் மீதான விசா ரணையை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் கஜேந்திரன் கூறியதாவது, முதல்வர் அசோகன் என்னை இழிவுபடுத்தியதோடு, பழி வாங்கும் நோக்கில் செயல்பட்டார். மேலும், பணிக்கு முறையாக வர வில்லை எனப் பொய்யாக புகாரளித் தார். எனது வருகைப் பதிவை அழித் துள்ளார். அசோகனின் பழிவாங்கும் நடவடிக்கையால் வேலை இல்லாமல் தவித்து வருகிறேன். அசோகனின் தொந்தரவு காரணமாக பல மருத்து வர்கள் பணியில் இருந்து விலகி சென்றுள்ளனர் எனத் தெரிவித்தார். முதல்வர் அசோகனிடம் விசா ரணை தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, மருத்துவமனையில் யாரை எங்கு பணியமர்த்துவது என்பது நிர்வாகம் தொடர்பான விஷயம். விசாரணை தொடர்பாகப் பேட்டியளிக்க முடியாது என தெரி வித்தார்.

;