tamilnadu

img

சிறுபான்மை மக்களுக்கான குறைதீர் கூட்டத்தை நடத்திடுக

நாமக்கல், ஆக.30- சிறுபான்மை மக்களுக்கான குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்திட வேண்டுமென  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நாமக்கல் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.  தமிழ்நாடு சிறுபான்மை நலக் குழு நாமக்கல் மாவட்ட 3ஆவது  மாநாடு வியாழனன்று பள்ளிபாளை யத்தில் மாவட்ட துணைத்தலைவர் ஏ.அசன் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஐ.ராயப்பன் வரவேற்பு ரையாற்றினார். மாவட்ட துணைத்  தலைவர் வின்சென்ட் தேவதாஸ் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி அறிக்கையை முன்வைத்து பேசினார். பள்ளிபாளையம் பள்ளி வாசல் முத்தவள்ளி எஸ்.குலோப்ஜான்,  சிந்தனையாளர் மன்றம் நிறுவனர் எசந்தராவ் பாஸ்டர் எஸ்.சின்னப்பன் இமானு வேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  இம்மாநாட்டில், சிறுபான்மை மக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் மற்றும் கல்வி உதவித்தொகை  அனைவருக்கும் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  அரசுப்  பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி  இருப்பது போல அரசு உதவி பெறும்  பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும். மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியர் மூலம் சிறு பான்மை மக்களின் குறைகளை கேட்கும் கூட்டத்தை நடத்தப்பட வேண்டும். பல வருடங்களாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறை வாசிகளை விடுதலை செய்ய  வேண்டும். தலித் கிறிஸ்தவர் களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.  சிறுபான்மையினருக்கு தனித் துறை உருவாக்க வேண்டும். வணிக  கடன் மற்றும் தொழில் கடன் கிடைப் பதை உறுதி செய்ய வேண்டும். சிறு பான்மை மக்களின் வழிபாட்டு உரிமைகளை உறுதி செய்திட  வேண்டும். உருது அரபி ஆசிரியர்  காலிப்பணியிடங்களை நிரப்பப் பட வேண்டும்.  நாமக்கல் மாவட்டத் தில் சொந்த வீடு இல்லாத இஸ் லாமிய, கிறிஸ்துவ ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். குமாரபாளையம் சேலம் மெயின் ரோடு கபர்ஸ்தான் பள்ளி புனரமைப்பு பணிகளுக்கு அரசு அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டுமென தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு

இதைத்தொடர்ந்து அமைப்பின்  மாவட்ட தலைவராக வின்செட்  தேவதாஸ், மாவட்ட செயலாள ராக ஏ.அசன், மாவட்ட பொருளாள ராக ஜமாலுதீன், மாவட்ட துணைத் தலைவர்களாக எஸ்.கந்தசாமி, ஐ.ராயப்பன், பி.ஜெகநாதன், அமல் ராஜ், துணை செயலாளர்களாக ந.க.ரவிநாத், எஸ்.மணிவேல், எஸ். சின்னப்பன் உட்பட 19பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு  செய்யப்பட்டது. புதிய நிர்வாகி களை அறிமுகப்படுத்தி தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாநில பொதுச்செயலாளர் பி. மாரிமுத்து நிறைவுரையாற்றினார்.
 

;