tamilnadu

15 வனகிராமங்களுக்கு பட்டா வழங்குவதில் இழுபறி மலைவாழ் மக்கள் சங்கம் கடும் கண்டனம்

பொள்ளாச்சி, ஜன.27- பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு உட்பட்ட 15 வன கிராமங்களுக்கு அனுபவ நிலப் பட்டா வழங்குவதில் தாமதம் நிலவி வருவதற்கு தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியடுத்த வால்பாறை யொட்டி 15 வனகிராமங்கள் அமைந்துள்ளது. இதில்  800 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பல ஆண்டுக ளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்பு களுக்கான அனுபவ நிலப்பட்டா வழங்கக்கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைமையில் தொடர் போராட்டங்களும் , இயக்கங்களும் கடந்த காலங் களில் நடைபெற்றது. அதன் விளைவாக கோழிகமுத்தி வன கிராமத்தில் வசிக்கின்ற 48 மலைவாழ் மக்கள் குடும்பங்களுக்கும், பழைய சர்கார்பதி பகுதியில் வசிக் கின்ற 93 குடும்பங்களுக்கும் அனுபவ நிலப்பட்டாக்கள் வனத்துறையின் அனுமதியுடன், வருவாய்த் துறை யினரால் கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு உட்பட்ட 15 வன கிராமங்களில் வசிக்கின்ற சுமார்  600 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்க ளுக்கு அனுபவ நிலப்பட்டாக்கான கணக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அந்த வனகிராமங்க ளிலுள்ள குடியிருப்புகளுக்கு அனுபவ நிலப்பட்டா வழங்கப்படவில்லை. இதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம் தெர்வித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம்  கூறுகை யில்; மாவட்ட வன அலுவலரும், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனருமான மாரிமுத்து தொடர்ந்து மலைவாழ் மக்களை வஞ்சிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இவர் ஆனைமலை புலிகள்  காப்பகத்தின் துணை இயக்குநராக உள்ளதால், மலைவாழ் மக்களுக்கான உரிமைகளை தொடர்ந்து மறுத்து வரு கிறார். 15 வன கிராமங்களுக்கான அனுபவ நிலப்பட்டா  வழங்குவதற்கு முழு முகாந்தரம் இருந்தும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு வனத்துறையே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே இவரை பணிநீக்கம் செய்தோ  அல்லது பணியிடம் மாற்றம் செய்தோ துறைரீதியாக கடுமையான நடவடிக்கையினை எடுக்க தமிழக வனத் துறை அமைச்சர் முன்வர வேண்டும்.  மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு  வனத்துறை அமைச்சர் இப்பிரச்சனையில் உடனடியாக தலையீடு செய்து 15 வன கிராமங்களுக்கான குடியிருப்பு நில பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;