tamilnadu

நாமக்கல் அருகே தங்க நகைகள் பறிமுதல்

நாமக்கல், ஏப்.2-நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட கீரம்பூர் அருகேயுள்ள ராசாம்பாளையம் சுங்கச் சாவடி பகுதியில் தேர்தல்பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.3.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.ராசாம்பாளையம் சுங்கச் சாவடி பகுதியில் பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த செங்கோடன் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேலத்தில் இருந்து மதுரையை நோக்கி சென்ற ஆம்னி வேனை நிறுத்தி சோதனைமேற்கொண்டனர். இதில், ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பிலான சுமார் 8 கிலோ தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.இதில் 7 கிலோ தங்க நகைகளுக்கு மட்டுமே உரிய ஆவணம் இருந்தது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர் செங்கோடன் அவற்றை பரமத்தி வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தேவிகா ராணியிடம் ஒப்படைத்தார். பின்னர் உரிய ஆவணங்கள் இன்றிகொண்டு வரப்பட்ட தங்க நகைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆசியா மரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருமான வரித் துறையினர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில்,  நகையின் அளவும், எடையின் அளவும் மாறுபாடாக இருந்ததாகக் கூறப்பட்டது. தகவலின் பேரில் வருமானவரித் துறை அதிகாரி பிரியாரெட்டி சர்மா தலைமையில் வந்த அதிகாரிகள் குழுவினர், நகைகளையும், அது தொடர்பான ஆவணங்களையும் சோதனையிட்டதில் அவை சரியாகவே இருந்தன.

;