நாமக்கல், டிச.3- கொல்லிமலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க 2வது நாளாக தடை விதிக் கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது சாரல் மழையும், இரவு நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் காட் டாற்றில் தண்ணீர் வரத்து அதி கரித்து மாசில்லா அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம்மருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது. இந்நிலையில் திங்களன்று மதியம் முதல் கொல்லிமலையில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனையடுத்து சுற்றுலா பயணி களின் நலன்கருதி, அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். செவ்வாயன்று தொடர்ந்து மழை பெய்ததால் 2 ஆம் நாளாக குளிக்க தடை விதிக்கப் பட்டது. இதனால் ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டியுள்ளதால் அங்கு வழுக்கி விழும் அபாயம் ஏற்பட் டுள்ளது. மேலும், அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு கிறது. இதனால் சுற்றுலா பயணி களுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.