tamilnadu

img

தோல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா

சேலம், ஜன.3- சேலம் ஜெனிஸ் அறக்கட்டளை சார்பில் தோல் பொருட்களை கொண்டு கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மற்றும் உப கரணங்கள் வழங்கும் விழா வெள்ளி யன்று நடைபெற்றது. சேலம் ஜெனிஸ் எஜுகேஷனல் சேரிட்டபுள் கல்வி அறக்கட்டளை கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. குறிப்பாக விளிம்பு நிலை மக்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு தொழிற் கல்வி,  திறன் மேம்பாடு கல்வி அளித்து அவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற் படுத்தித் தருகிறது. இதன் ஒரு பகுதி யாக வெள்ளியன்று தோல் மற்றும் ரெக்சின் பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்களை தயா ரிப்பது குறித்த பயிற்சி பேர்லண்ட்ஸ் அழகாபுரம் காவல் நிலையம் எதிரில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. திறன் மேம்பாடு  குறித்த தகவல்களை சேலம் மாவட்ட தொழில் மைய மேலாளர் சிவகுமார் கருத்துரையாற்றினார். தொழில்சார்ந்த கருவிகளை வழங்கி பேர்லாண்ஸ் இந்தியன் வங்கி மேலாளர் எம்.பாலமுருகன் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். இதில் ஜெனிஸ் அறக்கட்டளை நிர்வாக மேலாளர் கர்லின் எபி மற்றும் அறக் கட்டளை ஊழியர்கள் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.  

;