tamilnadu

img

மக்களை பாதிக்கும் புதிய கல்வி கொள்கையை திரும்பப் பெறுக

கோவை, ஜூலை 12- மக்களை பாதிக்கும் புதிய கல்வி கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஒருங் கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வலியுறுத்தியுள்ளார். திராவிட விடுதலை கழகம் சார்பில் கோவையில் வெள்ளி யன்று புதிய கல்வி கொள்கை 2019 என்கிற தலைப்பில் சிறப்பு கருத் தரங்கம் நடைபெற்றது. கோவை ரயில்நிலையம் அருகேயுள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற  இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்ட செயலாளர் நேருதாஸ் தலைமை தாங்கினார். அமைப் பின் நிர்வாகி வெங்கட் வரவேற்பு ரையாற்றனார். இதில் பொது பள்ளிக்கான மாநில மேடை ஒருங் கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். முன்னதாக செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு கல்வி  முறையை ஒட்டு மொத்தமாக சிதைத்து, வேறொரு கல்வி முறையை புகுத்த முயல்கி றது. அக்கொள்கையில் சமூகத்தி லும்,கல்வியிலும் பின்தன்ங்கிய சமூகத்தின் உயர்கல்வி பற்றி எதுவும்  பேசவில்லை.  இந்திய அரசமைப்பு சட்டம், கூட்டாட்சி தத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிராக புதிய கல்வி கொள்கை உள்ளது. மக்களைப் பாதிக்கும் இந்த கொள்கையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். இக்கருத்தரங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர்.