tamilnadu

img

தமிழக முதல்வரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து

சேலம், ஜூன் 9- எத்தனையோ திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை செயல்படுத்தாமல் விவசாயி களை அழிப்பதைக் குறிக்கோளா கக் கொண்டுள்ள முதல்வரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து விவசாயிகள், உயிரே போனாலும் இந்த எட்டு வழிச் சாலைத் திட் டத்திற்கு நிலம் வழங்க மாட்டோம்  என போராட்டத்தில் ஈடுபட்ட னர். சேலத்தில் ஈரடுக்கு மேம்பா லம் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமி பேசும்போது, எட்டு வழிச் சாலை திட்டம் நல்ல தொரு திட்டம். இதனால் சேலம்  மாவட்டத்தில் தொழில் வளம் பெருகும். ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஒரு சில காரணங்களால் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதனை எல்லாம் சரி செய்து  அனைத்து விவசாயிகளையும் சமாதானப்படுத்தி இந்த எட்டு  வழிச் சாலை திட்டத்தை நிறை வேற்றும் முயற்சியை மத்திய அர சும், மாநில அரசும் மேற்கொள்ளும் என்று அவர் பேசினார். முதல்வரி ன் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரி வித்து சேலம் மின்னாம்பள்ளி மற்றும் குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுகின்ற எடப்பாடி தலைமை யிலான மாநில அரசை கண்டித் தும், மத்திய அரசைக் கண்டித் தும் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் எட்டு வழிச் சாலை  திட்டத்திற்கு நிலம் கையகப்படுத் தப்படும் இடமான மஞ்சவாடி கணவாய் உள்ளிட்ட பகுதிகளி லும் கிராம மக்கள் முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி னர். அப்போது விவசாயி கூறுகை யில், முதல்வர் உயிர் இழப்பை குறைப்பதற்காகவே இந்த எட்டு வழிச் சாலை எனப்படும் விரைவு சாலை திட்டத்தை அமல்படுத்து வதாக கூறினார். விரைவுச்சாலை யில் தான் அதிக விபத்துக்கள் நடக்கும் என்பது கூட தெரியாமல் முதல்வர் பேசி வருகிறார். மேலும் எரிபொருள் சிக்கனம் ஆகும் என்று பேசுவது வேடிக்கையாக உள்ளது எந்த ஒரு நடுத்தர குடும் பத்தைச் சேர்ந்தவர்களும் இந்தச் சாலையைப் பயன்படுத்த போவ தில்லை. ஆகவே எந்த ஒரு கால கட்டத்திலும் இந்த சாலை எங்க ளுக்கு வேண்டாம். இந்தச் சாலை  சென்னை செல்லும் என  முதல்வர் உண்மைக்கு மாறான பொய் களைக் கூறி வருகிறார். இந்த சாலையானது சென்னையின் தொலைவிலுள்ள முடிச்சூர் பகுதி யில் நின்றுவிடும் அங்கிருந்து சென்னைக்குச் செல்வதற்கு சுமார் 3 மணி நேரம் ஆகும். எனவே எடப்பாடி அரசு உச்சநீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்துள்ள மனுவை வாபஸ் வாங்க வேண் டும்.  தற்போது உள்ள காலகட்டத் தில் தமிழகத்தில் குடிநீர் பெரும் பிரச்சனையாக உள்ளது. அத னைத் தீர்ப்பதற்கு முதல்வர் கவ னம் செலுத்தாமல் சாலை அமைத்து விவசாயிகளை அழிக் கும் இந்த எட்டு வழி சாலை திட் டத்தில் உறுதியாக உள்ளது எங்க ளுக்கு வேதனை அளிப்பதாகும் எனத் தெரிவித்தனர். மேலும் உயிரே போனாலும், எட்டு வழிச் சாலைக்கு ஒரு பிடி மண்ணைக் கூட தரமாட்டோம் என விவசாயிகள் உறுதியாகத் தெரிவித்தனர்.

;