tamilnadu

img

கட்டண கொள்ளையில் ஆம்னி பேருந்துகள் மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு புகார்

கோவை, மே 19 -  புலம்பெயர்ந்த தொழி லாளிகளின் நெருக்கடியை சாதகமாக்கிக் கொண்டு ஆம்னி பேருந்துகள் கட் டண கொள்ளையில் ஈடு படுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு புகார் அளித்துள்ளது. கொரோனாவினால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை குறித்து  திங்களன்று சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் கே.மனோ கரன் மற்றும் கே.அஜய்குமார் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசா மணியை சந்தித்து விளக்கினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர் களிடம் கூறுகையில், கோவை மாவட்டத் தில் பல்லாயிரக்கணக்கான மேற்குவங்க தொழிலாளர்கள் உள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் என்கிற நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள முடியாமல் பெரும்பாலோர் சொந்த மாநிலம் செல்ல விரும்புகின்றனர். ஆனால், இதற்கான போதிய ரயில் வசதி ஏற்படுத்தி தராததால் அவர்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.  ஆகவே, மேற்கு வங்க மாநிலத்திற்கு கூடுதல் சிறப்பு ரயில் வசதி செய்து தரப்பட வேண்டும். மேலும், புலம்பெயர்ந்த தொழி லாளர்களின் நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகிறது. இதனை தடுத்து அரசே இதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். கோவையில் தங்கி பணிபுரிய விரும்பும் புலம்பெயர் தொழி லாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் மூன்று மாதங்களுக்கு தேவையான ரேசன் பொருட்களை வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை ஆட்சியரிடம் வலி யுறுத்தியதாக தெரிவித்தனர்.

;