ரூ.1000 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
திருப்பூர், ஜன. 31- திருப்பூர் மாவட்டத்தில் வங்கி கள் வேலை நிறுத்தப் போராட்டத் தின் காரணமாக ரூ.1000 கோடி பணபரிவர்த்தணை பாதிக்கப் பட்டது.
போராட்டம் அறிவிப்பு
வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் காலா வதியாகி பல மாதங்களை கடந் தும் ஐ.பி.ஏ.யும், மத்திய அரசும் பேச்சுவார்த்தையை காலதாம தப்படுத்தி வருகின்றனர். இதனை உடனடியாக முடித்து தர பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும் என மத்திய அரசும், இந்திய வங்கிகள் கூட்டமைப்பையும் வலியுறுத்தும் வகையில் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.
வங்கிகள் வேலை நிறுத்தம்
அதன்படி முதற்கட்டமாக வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடு வதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி வெள்ளியன்று வங்கிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி யது. இதையொட்டி திருப்பூர் டவுன்ஹால் அருகே உள்ள ஆந் திரா வங்கி முன்பு அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப் பின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மனோக ரன் தலைமை தாங்கினார். பொறு ப்பாளர்கள் விஜயானந்த், மகா தேவன், பெலிக்ஸ் பால்ராஜ், ராதாகிருஷ்ணன், ரவி, பாபு உள்பட பலர் கலந்துகொண் டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில் ஏராள மானவர்கள் கலந்துகொண்டனர்.
5 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பு
இந்த வேலை நிறுத்த போராட் டத்தில் 9 வங்கி ஊழியர் சங்கங் கள் பற்கேற்றுள்ளன. இதில் திருப் பூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கர்நாடகா வங்கி, கரூர் வைசியா உள்ளிட்ட வங்கிகளை சேர்ந்த முதன்மை மேலாளர்கள் முதல் துப்புரவு தொழிலாளர்கள் வரை என மொத் தம் 5 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற் றுள்ளனர். இன்று (சனி) 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடை பெறுகிறது. இதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால், வருகிற மார்ச் 11 ஆம் தேதி முதல் 13-ந் தேதி வரை 2-ம் கட்ட வேலை நிறுத்த போராட் டம், தொடர்ந்து ஏப்ரல் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்கள் நடைபெறும் என வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
ரூ.1000 கோடி
இது குறித்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறியதாவது:- ஊதிய உயர்வு கேட்டு தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தற்போது முதற்கட்டமாக 2 நாட் கள் வேலை நிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டுள்ளோம். இந்த போராட்டத்தில் திருப் பூர் மாவட்டத்தில் உள்ள 353 வங்கி கிளைகளை சேர்ந்த 5 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். வெள்ளியன்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரண மாக ஒரேநாளில் ரூ.1000 கோடிக்கு வங்கிகளில் பணபரிவர்த்தணை பாதிக்கப்பட்டுள்ளது. சனியன்று 2-வது நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடை பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.