tamilnadu

img

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

ஈரோடு, ஜூலை 4- ஈரோடு மாநகராட்சி அலு வலகத்தில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற் றது. இந்த கூட்டத்திற்கு மாநக ராட்சி ஆணையாளர் இளங் கோவன் தலைமை தாங்கி விழிப் புணர்வு கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்,  மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் மழைநீர் சேகரிப்பு திட் டத்தை செயல்படுத்த அறிவுறுத் தியுள்ளது. மாநகராட்சி பகுதி களில் ஒவ்வொரு வார்டு பகுதி களிலும் குப்பை தொட்டி இல் லாத வார்டுகளாக மாற்ற நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மக்கும், மக்காத குப் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் என குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டு வருகிறது. மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக வரும்போது அவர்களிடம் குப்பைகளை பிரித்து கொடுக்க வேண்டும்.  இவ்வாறு தினசரி சேகரிக் கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் வகையில் 15 இடங்களில் மைக்ரோ கம்போஸ்டிங் சென் டர் அமைக்கப்பட்டுள்ளது. தற் போது மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தரம் பிரித்து வாங் கப்படுவதால் குப்பைகளும் குறைந்துள்ளது. பொதுமக்கள் குப்பை தொட்டி உள்ள இடங்க ளில் குப்பைகளை தொட்டியில் போட வேண்டும். சிலர் வாகனத் தில் வரும்போது குப்பைகளை ரோட்டோரத்தில் வீசிவிட்டு செல்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். ஈரோடு மாநகராட்சி பகுதியை பொருத்தவரை வெண் டிபாளையம், வைராபாளையம் ஆகிய இடங்களில் குப்பை கிடங் குகள் உள்ளது.  இங்குள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீருக்கே தட்டுப் பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதற்காகமுன்கூட்டியே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்று அரசு உத்தர விட்டு செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதிகளை பொருத்தவரை 1.20 லட்சம் வீடுகள் உள்ளது. இது வரை 14 ஆயிரம் வீடுகளில் ஆய்வு  நடத்தப்பட்டதில் 9 ஆயிரம் வீடு களில் மழைநீர் சேகரிப்பு கட்ட மைப்பு முறையாக உள்ளது. மற்ற வீடுகளில் மழைநீர் சேக ரிப்பு இருந்தாலும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

இதை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி யுள்ளோம். தண்ணீரின் தேவையை உணர்ந்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண் டும்.  மழைக்காலங்களில் பெய்யும் நீரை மழைநீர் சேகரிப்பு மூலமாக கிணறுகளிலோ, அதற்கான தொட்டிகளிலோ தேக்கி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எதிர்காலத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளில் மாணவ, மாணவியர் களிடம் திடக்கழிவு மேலாண்மை,  மழைநீர் சேகரிப்பு, தண்ணீர்  சிக்கனம் குறித்து எடுத்துரைக்க  வேண்டும். மாணவ, மாணவியர் களின் மூலமாக பெற்றோர்க ளுக்கும் விழிப்புணர்வை ஏற்ப டுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.  இந்த கூட்டத்தில் செயற் பொறியாளர் விஜயகுமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சுமதி, உதவி செயற் பொறியாளர் கோபிநாத் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

;