tamilnadu

கூடலூர் அரசு கலைக் கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்

உதகை, ஏப். 24-கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்களன்று தொடங்கியது.நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. கோழிப்பாலம் கல்லூரி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பங்கள் மே.6ஆம் தேதி வரை அரசு வேலை நாட்களில் மட்டும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து மே 6 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கல்லூரியின் முதல்வர் வே.சுரேஷ் கூறியுள்ளார்.


பாலிடெக்னிக் 


உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் தொழில்நுட்ப கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 2019-20ம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக், எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பொறியியல், இன்ஸ்ட்ரூமென்டேசன் அண்டு கண்ட்ரோல் பொறியியல் மற்றும் மாடர்ன் ஆபிஸ் பிராக்டிஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே-10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 


;