tamilnadu

வேளாண் பல்கலை.யில் இளங்கலை படிப்பிற்கு 3 மணி நேரத்தில் 4 ஆயிரம் பேர் விண்ணப்பம்

கோவை, மே 8-கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பில் சேர ஆன்லைன் மூலம் புதன்கிழமை முதல் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. இதில், முதல் மூன்று மணி நேரத்தில் 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 14 உறுப்பு மற்றும் 27 இணைப்பு கல்லூரி உள்ளது. இதில், இளங்கலை அறிவியல் பிரிவில் 6 படிப்புகள் மற்றும் உயிர்தொழில் நுட்பவியல் பிரிவில் 4 தொழில்நுட்ப படிப்பு என மொத்தம் 10 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.இந்த படிப்புகளுக்கு 2019-2020 ஆம் ஆண்டில்அறிவியல் படிப்பில் 3,695 இடங்கள், தொழில்நுட்ப படிப்பில் 210 இடங்கள் என மொத்தம் 3,905 இடங்கள் நிரப்பப்படுகிறது. பிளஸ் 2 வில்கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது கணினி அறிவியல் பிரிவுவில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 8 ஆம் தேதி முதல் ஜூன் 7 ஆம்தேதி வரை வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, புதனன்று இளங்கலை மாணவர் சேர்க்கை விண்ணப்பத்திற்கான இணையதளத்தை வேளாண்பல்கைலக்கழக துணை வேந்தர் குமார் துவக்கிவைத்தார்.இதில் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, முதன்மையர்கல்யாணசுந்தரம், கென்னடி, ரகுசந்தர் ஆகியோர்கலந்துகொண்டனர். வேளாண் பல்கலைக்கழகத்தின் hவவயீ://வயேரடிடேiநே.in, hவவயீ://றறற.வயேர.யஉ.in/ரபயனஅளைளiடிn.hவஅட என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினர் ரூ.600, எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.300. மேலும், மாணவர்களுக்கு உதவும் வகையில் வேளாண் பல்கலைக்கழகத்தின் அனைத்து உறுப்பு கல்லூரிகள், வேளாண் அறிவியல் நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் வேளாண்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என பல்லைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இணையதளம் விண்ணப்ப விநியோகம் துவங்கிய 3 மணி நேரத்தில் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள்ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;