திருவனந்தபுரம், ஜூலை 16- திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரி ரஷீத் சல் சலாமி இந்தியாவில் இருந்து துபாய்க்கு தப்பினார். ஞாயிற்றுக்கிழமை திருவனந்த புரத்திலிருந்து தில்லிக்கு புறப்பட்ட அட்டாசே, அங்கிருந்து துபாய் சென்றுள்ளார். அட்டாசே ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தூதர கத்தின் கான்சிலேட் ஜெனரல் பொறுப்பில் இருந்தார். அட்டாசெ பெயரில் இராஜ தந்திர பார்சலில் வந்த 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ விசாரணை நடந்து கொண்டிருக்கையில் நிலையில், இந்தியாவில் இருந்து அவர் வெளியேறியுள்ளார். தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரித் மற்றும் சொப்னா சுரேஷ் ஆகியோருடன் அட்டாசே தொடர்பு கொண்டிருந்தார். சுங்கத்துறை யால் கைப்பற்றப்பட்ட பார்சலை விடுவிக்க உதவுமாறு சொப்னா சுரேஷ் பல முறை அழைக்கப் பட்டுள்ளார். தனக்கான பார்சலில் தங்கம் கடத்தப்படுவது குறித்து தனக்குத் தெரியாது என்றும், பேரீச்சம் பழம், பால் பவுடர் போன்ற பொருட்க ளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டி ருந்ததாகவும் அட்டாசே ஏற்கனவே கூறினார். தங்கக் கடத்தலில் அட்டா சேயின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று சந்தீப் நாயர் ஏற்கனவே கோரியிருந்தார்.