tamilnadu

img

மத்திய அரசின் முடிவு ஒருதலைபட்சமானது.... மறுபரிசீலனை செய்ய முதல்வர் வலியுறுத்தல்

திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைப்பது மத்திய அரசின் ஒருதலை பட்சமான முடிவு எனவும், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார். 

பலமுறை கேரள அரசு முன்வைத்த கோரிக்கையை புறக்கணித்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இதுகுறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ள நிலையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநில அரசின் வாதங்களை பரிசீலிக்காமல் எடுக்கப்பட்ட முடிவுடன் ஒத்துழைக்க முடியாது எனவும் முதல்வர் தனது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.மத்திய அரசின் விமானத்துறை அமைச்சரகம் அளித்த உறுதிமொழி ஏதும் பின்பற்றப்படவில்லை எனவும் தனது முடிவை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருந்தால் அதோடு மாநில அரசால் இணங்கிச் செல்ல முடியாது எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

50 ஆண்டு தனியாரிடம்
நெடும்பாச்சேரி மற்றும் கண்ணூர் விமான நிலையங்கள் மிகச்சிறப்பாக நிர்வகிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய பிறகும் மத்திய அரசு அதை ஏற்கவில்லை. திருவனந்தபுரம் விமான நிலையத்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்கிற கேரள அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. நிர்வகிப்பு, வளர்ச்சி, நவீனமாக்கல் போன்ற பொறுப்புகளை தனியார் நிறுவனத்துக்கு அளித்து புதிய முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஐம்பது ஆண்டுகளுக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தின் உரிமை தனியார் நிறுவனத்திடம் இருக்கும்.

;