tamilnadu

img

கேரளத்தில் மேலும் 65 பேருக்கு கோவிட் உறுதி.....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் புதனன்று மேலும் 65 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 34 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 25 பேர் இதர மாநிலங்களில் இருந்தும்வந்தவர்கள்.கடந்த ஜுன் 7 ஆம் தேதி திரிச்சூர்மாவட்டத்தில் உயிரிழந்த குமாரன்(87) என்பவரது மாதிரிகள் பரி சோதனைக்காக ஆலப்புழா என்ஐபிக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. புதனன்று கிடைத்த பரிசோதனை முடிவு அவருக்கு கோவிட் நோய் இருந்தது உறுதியானது. இதோடு கேரளத்தில் கோவிட்டுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. நோய் உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த 57 பேர் புதனன்று குணமடைந்தனர். 

இதுவரை மொத்தம் 905 பேர் கோவிட்டிலிருந்து குண மடைந்துள்ளனர். நோய் உறுதி செய்யப்பட்ட 1238 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.   கேரளத்திற்கு விமானம் மூலம் 53,545 பேர் வந்துள்ளனர். கப்பலில் 1621 பேர் , சாலை வழியாக 1,28,732 பேர், ரயிலில் 23,296 பேர் என மொத்தம் 2,07,194 பேர் வெளியில் இருந்து வந்துள்ளனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 2,10,592 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,08,748 பேர் வீடுகளிலும் நிறுவன கண்காணிப்பிலும் உள்ள
னர். 1844 பேர் மருத்துவமனை கண்காணிப்பில்  உள்ளனர். புதனன்று 206 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 4689 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை 98,304 நபர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவற்றில் 93,475 மாதிரிகளில் நோய் இல்லை என உறுதியானது. இதல்லாமல் சுகாதாரப் பணியாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக தொடர்பு அதிகம் உள்ள நபர்கள்போன்ற முன்னுரிமை பிரிவினரிட மிருந்து சேகரிக்கப்பட்ட 24,508 மாதிரிகளில், 22,950 மாதிரிகளில் நோய் தொற்று இல்லை. மறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 6,364 மாதிரிகள் உட்பட மொத்தம் 1,31,006 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.  புதனன்று புதிதாக 5 தீவிர நோய் பரவல் பகுதிகள் (ஹாட் ஸ்பாட்) அறிவிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் தற்போது 163 தீவிர நோய் பரவல் பகுதிகள் உள்ளன. 

வெளிநாடுகளில் 3 பேர் பலி
வெளிநாடுவாழ் மலையாளிகளில் கோவிட் 19 நோய் தொற்றால் புதனன்று மூன்று பேர் பலியாகினர். திருவூர் குன்னம்குளம் சோவனூரைச் சேர்ந்த அசோக் குமார் (53), கடவல்லூரில் உள்ள பட்டையம்புல்லியைச் சேர்ந்த பாசி (60),   ஆகியோர் சவூதி அரேபியாவிலும் திரூர் மங்கலத்தைச் சேர்ந்த முஜீப் (40) குவைத்திலும் உயிரிழந்தனர்.  இதுவரை வெளிநாடுகளில், கோவிட் நோயால் இறந்த மலையாளிகளின் எண்ணிக்கை 115 ஐ எட்டியுள்ளது.

;