tamilnadu

கோவிட் : கேரளத்தில் புதியது 301 வெளியிலிருந்து வந்தோர் 194

திருவனந்தபுரம், ஜுலை 9- கேரளத்தில் புதனன்று 272 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. 99 பேர் வெளிநாடுக ளில் இருந்தும் 95 பேர் இதர  மாநிலங்களில்  இருந்தும் கேரளத்துக்கு வந்தவர்கள். சிகிச்சை பெற்றுவந்த வர்களில் 107 பேர் குணமடைந்தனர். புதனன்று கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இதுவரை 3561 பேர் கோவிட்டிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 2605 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோட்டயம் மாவட்டத்தில் இரண்டு, இடுக்கி மாவட்டத்தில் ஒருவர் என மூன்று சுகாதா ரத்துறை ஊழியர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். திரிச்சூர் மாவட்டத்தில் 9 பிஎஸ்எப் வீரர்களுக்கும், கண்ணூர் மாவட்டத்தில் ஒரு டிஎஸ்சி வீரருக்கும் ஆலப்புழா மாவட்டத்தில் 3 இந்தோ திபெத் எல்லை காவ லர்களுக்கும் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. மேலும் துபாயில் இருந்து கேரளத்திற்கு வந்து மரணமடைந்த கொல்லத்தைச் சேர்ந்த மனோஜூ (24) க்கு ஆலப்புழா ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் நடந்த தொடர் ஆய்வில் அவ ருக்கு கொவிட் தொற்று இல்லை என்பது உறுதியானது.  

கேரளத்தில் 1,85,546 பேர்  கண்காணிப்பில் உள்ள னர். இதில் 1,82,409 பேர் வீடுகள்/ நிறுவனங்களிலும் 3137 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். 421 பேர் புதனன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். புதனன்று காலை வரையிலான  24 மணி நேரத்தில் 11,250 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதுவரை மொத்தம் 2,96,183 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில் 4754 மாதிரிகளின் முடிவுகள் நிலுவையில் உள்ளன. சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட முன்னுரிமை பிரிவினரின் 65,101 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில் 60,898 மாதிரிகள் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. புதனன்று 4 கட்டுப்பாட்டு பகுதிகள் புதிதாக அறிவிக் கப்பட்டன. தற்போது கேரளத்தில் 169 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

;