tamilnadu

img

உங்களுக்குத் தெரியுமா?

பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் ஆர்வமிக்க இளசுகள் பேட்டிங்கை விட பந்து வீச்சைத் தான் அதிகம் விரும்பு வார்கள். அதுவும் சுழற்பந்து வீச்சு அல்ல. 150கிமீ வேகத்தில் வீசும் வேகப்பந்துவீச்சைத்தான் அதிகம் நேசிப்பார்கள். பேட்டிங் மீது ஓரளவு ஆர்வம் இருந்தாலும் பீல்டிங் பற்றி கண்டுகொள்ளமாட்டார்கள். சொல்லப்போனால் பீல்டிங் அவர்களுக்குப் பிடிக்காது என்று தான் கூற வேண்டும். தற்போதைய கிரிக்கெட் உலகிலும் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை நம்பி ஒருபோதும் களமிறங்காது. பந்துவீச்சு தான் அந்த அணியின் பிரதான அம்சம்.