tamilnadu

img

ஐபிஎல் கோப்பை யாருக்கு?

சென்னை - மும்பை இன்று பலப்பரிட்சை 

கடந்த ஒருமாத காலம் கிரிக்கெட் ரசிகர்களின் இமைகளுக்கு அதிக வேலை கொடுத்த ஐபிஎல் தொடரின் 12-வதுசீசன் இன்றோடு (ஞாயிறன்று) நிறைவடைகிறது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஞாயிறன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.கடந்த சீசனில் கோப்பையை கைப்பற்றியது போல இந்தமுறையும் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் செல்லும் முனைப்பில்சென்னை அணியும், சென்னை அணியின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் மும்பை அணியும் என இரு அணிகளும் கோப்பைக்காக வரிந்துகட்டுவதால் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் இறுதிப் போட்டி

இடம்: ஹைதராபாத் நேரம்: இரவு 7.30 மணி