tamilnadu

img

சாதனை நோக்கி விராட் கோலி - இந்திய கிரிக்கெட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி பல சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையான முதல் டெஸ்ட் தொடர் நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் பல சாதனைகளை படைக்கவுள்ளார். இந்நிலையில் இத்தொடரில் 242 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்த நான்காவது இந்திய வீரர் ஆவார். மேலும் 281 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 21,000 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
 

;