tamilnadu

img

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்

நியூஸி., ஒயிட் வாஷ்

3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க நியூஸிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. கிரிக்கெட் விளையாட்டில் இருநாடுகளும் சமபலத்தில் இருப்பதால் இந்த தொடரை கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்தது.  முதல் டெஸ்ட் போட்டியில் (பெர்த்) ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற்ற 2-வது  ஆட்டத்திலும் (மெல்போர்ன்) ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி அந்த டெஸ்டை 247 ரன்கள் வித்தியாசத்துடன் அசத்தலாக வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் கடந்த வெள்ளியன்று தொடங்கியது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 279 ரன்கள் வித்தியாசத்தில் (4-வது நாளில்) வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் நியூஸிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்தது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியை நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

;