tamilnadu

img

இந்தியா - தெ.ஆ., அணிகள் மோதும் டெஸ்ட் தொடர்

இன்று தொடக்கம்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி-20, டெஸ்ட் என இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில்  பங்கேற்க இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.   இந்த சுற்றுப்பயணத்தில் முதல் அம்ச மான 3 போட்டிகளைக் கொண்ட டி-20  தொடர் 1-1 என்ற கணக்கில் (முதல் ஆட்டம் மழையால் பாதிப்பு) சமனில் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக 3 போட்டிகளை டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஆந்திர  மாநிலத்தின் கடற்கரை நகரமான விசாகப் பட்டினத்தில் புதனன்று தொடங்குகிறது.  டி-20 தொடர் சமனில் நிறைவடைந்ததால் டெஸ்ட் தொடரில் தங்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்த இரு அணிகளும் தீவிர பயிற்சியுடன் களமிறங்குகிறது. மேலும் இரு அணிகளும் அசூர பலத்தில் இருப்பதால் இந்த டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடும் லெவனை முன்கூட்டியே அறிவித்த இந்திய அணி

கிரிக்கெட் போட்டியைப் பொறுத்த வரையில் ஆடும் லெவனை போட்டி தொடங்கும் 2 மணிநேரத்திற்கு முன்பு அறிவிப்பார்கள். இது காலம் காலமாகப் பின்பற்றும் முறை. ஆனால் இந்திய அணி வியாழனன்று தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு செவ்வாயன்றே ஆடும் லெவனை அறிவித்துவிட்டது.    வீரர்கள் விபரம்: விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, அஸ்வின், ஜடேஜா, சஹா, இஷாந்த் சர்மா, ஷமி.  ஒன்றரை வருட கால இடைவெளிக்குப் பின்பு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஹா அணியில் இடம்பிடித்துள்ளார். அதிரடி வீரர் ரிஷப் பண்ட் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார். தென் ஆப்பிரிக்க அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

;