கடந்த கோடைக்காலத்தில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற 50-வது ஓவர் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து நாடு கோப்பையைக் கைப்பற்றியது. கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்தாக இருந்தாலும், கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்றது நியூஸிலாந்து அணி தான். ஏனென்றால் இறுதியாட்டம் டிராவில் முடிவடைந்தது. சூப்பர் ஓவரும் டிராவில் நிறைவடைய, பவுண்டரிகள் அடிப் படையில் இங்கிலாந்து அணிக்குக் கோப்பை வழங்கப்பட்டது. ஐசிசி-யின் இந்த முடிவு பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான கிரிக்கெட்டின் மன உறுதி (ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்) எனும் சிறப்பு விருதை மேரிலிபோன் கிரிக்கெட் கிளப் (MCC - இங்கிலாந்து) வழங்கி கௌரவித்துள்ளது. உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் திடமான மனப்பாங்கை வெளிப்படுத்தியதற்காக இவ்விருது வழங்கப்படுவதாக மேரிலிபோன் தெரிவித்துள்ளது.