tamilnadu

img

இன்சமாம் உல்அக், மார்க் பவுச்சர் ஆகியோரை வாழ்நாள் கௌரவ உறுப்பினர்களாக சேர்த்தது மெர்லிபோர்ன் கிரிக்கெட் சங்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல்அக்யையும், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் ஆகியோரை வாழ்நாள் கௌரவ உறுப்பினர்களாக மெர்லிபோர்ன் கிரிக்கெட் சங்கம் சேர்த்துள்ளது.


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய சாதனைகளை படைத்த வீரர்களை வாழ்நாள் உறுப்பினர்களாக சேர்த்து மெர்லிபோர்ன் கிரிக்கெட் சங்கம்(Melbourne Cricket Club) கௌரவித்து வருகிறது. ஏற்கனவே இந்த கௌரவ வாழ்நாள் உறுப்பினர் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவ்ரவ் கங்குலி, அஞ்சும் சோபரா உள்ளிட்ட 26 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போது இந்த கௌரவ வாழ்நாள் உறுப்பினர் பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் அக் மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.


கடந்த 1991ல் பாகிஸ்தான் அணியில் இணைந்த இன்சமாம் 119 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8829 ரன்களையும், 378 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,739 ரன்களையும் அடித்துள்ளார். மேலும், கடந்த 2001லிருந்து 2007வரை பாகிஸ்தான் அணியின் தலைவராக விளையாடியுள்ளார். 1997 முதல் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய மார்க் பவுச்சர் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட்டவர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 கேட்களை பிடித்த முதல் வீரர் என்ற பட்டத்தைக் கொண்டவர் மார்க் பவுச்சர். மேலும், ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக 395 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.


;