tamilnadu

img

இந்தியா - விண்டீஸ் அணிகள் மோதும் டி-20 தொடர் இன்று தொடக்கம்

இந்திய கிரிக்கெட் அணி டி-20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக மேற்கு இந்தியத் தீவுகளுக்கு (அமெரிக்காவில் 2 டி-20 ஆட்டங்கள்) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான மூன்று போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டம் அமெரிக்காவின் முக்கிய நகரமான புளோரிடாவில் நடைபெறுகிறது.     விண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை விட டி-20 போட்டி களை விரும்பி விளையாடும் என்ப தால் இந்திய அணி தொடரை வெல்வதில் சிக்கல் ஏற்படும். இருப்பினும் உலகக் கோப்பை தொடரில் ஏற்பட்ட கலங்கத்தை போக்க இந்திய அணி, விண்டீஸ் அணியை இரையாக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. இதனால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இடம் : லவ்டர்ஹில் மைதானம், புளோரிடா 
நேரம் : இரவு 8 மணி (இந்திய நேரம்)