கிரிக்கெட் உலகில் அதிரடிக்கு பெயர் பெற்ற நியூஸிலாந்து அணியைப் பற்றி இன்று பார்க்கலாம்.
கேப்டன்: கனே வில்லியம்சன்
பேட்ஸ்மேன்கள் : ராஸ் டெய்லர், மார்டின் குப்தில், கனே வில்லியம்சன்
ஆல்ரவுண்டர் ; காலின் டி கிராந்தோம்மி, காலின் முன்ரோ, ஜேம்ஸ் நீசம், மிட்செல் சான்ட்னர்.
விக்கெட் கீப்பர் : டாம் பிளன்டல், டாம் லதாம், ஹென்றி நிக்கோல்ஸ்,
பந்துவீச்சாளர்கள் : டிரென்ட் பௌல்ட், லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டிம் சவுத்தி, இஷ் ஜோதி.
சிறப்பு : டெஸ்ட், ஒருநாள், டி-20 எந்த விதமான ஆட்டமாக இருந்தாலும் சரி பந்து - ரன் விகிதம் பார்க்காமல் விளையாடும் ஒரே அணி நியூஸிலாந்து மட்டுமே.டெத் ஓவர்களை வீசும் பந்துவீச்சாளர்கள் அதிகமுள்ள ஒரே அணி.வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் ஒரே மன நிலையில் பெவிலியன் திரும்பும் சிறப்பு மிக்க அணி.
வீரர்கள் தேர்வு எப்படி?
பேட்டிங், ஆல்ரவுண்டர் பிரிவுக்கு மட்டும் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தனித்தன்மையான பந்துவீச்சாளர்களில் டிரென்ட் பௌல்ட், டிம் சவுத்தி மட்டும் சர்வதேச அனுபவம் உடையவர்கள்.மற்ற அனைவரும் குறைவான அனுபவம் உடையவர்கள்.
இங்கிலாந்து மண்ணில்
பலம் : அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் சூப்பர் பார்மில் இருப்பதால் அணியை சிறப்பாக வழிநடத்துவார். மிடில் ஆர்டர் பலமாக இருப்பதால் பேட்டிங் துறைக்குச் சிக்கல் உருவாகாது. டிரென்ட் பௌல்ட், டிம் சவுத்தி, இஷ் ஜோதி, மிட்செல் சான்ட்னர் ஆகியோர் சூப்பர் பார்மில் இருப்பதால் பந்துவீச்சிலும் சாதகமான சூழல் ஏற்படும்.
பலவீனம் : மிடில் ஆர்டர் வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆடி விரைவாக பெவிலியன் திரும்புவது.வேகப்பந்துவீச்சாளர்கள் 140 கிமீ வேகத்தில் பந்துவீசாமல் அதற்குக் குறைவான வேகத்தில் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசுவது.சுழற்பந்துவீச்சாளர்கள் ஸ்டெம்பை மட்டும் குறிவைத்து ரன் மழை பொழிய விடுவது.
மாற்ற வேண்டியவை : தொடக்க வீரர்களை மட்டும் அதிரடிக்குப் பயன்படுத்த வேண்டும்.பகுதி நேரப் பந்துவீச்சில் வேகத்தை அதிகம் சேர்க்காமல் சுழற்பந்து வீச்சைப் பயன்படுத்தலாம்.விக்கெட் கீப்பர்களில் டாம் லதாம் மட்டுமே பேட்டிங் பார்மில் உள்ளார்.மற்ற விக்கெட் கீப்பர்களுக்கும் பேட்டிங் பயிற்சி அளித்தால் அவசரக் காலத்தில் பயன்படும்.
உலகக்கோப்பையில் எப்படி?
இங்கிலாந்து நாட்டின் சீதோஷ்ண நிலை நியூஸிலாந்து நாட்டின் வானிலைக்கு நிகராக இருப்பதால் சாதகமான சூழல் ஏற்படும்.இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளைச் சமாளித்து ஆடினால் கோப்பை கூட வெல்லலாம்.ஆனால் சிரமமான விஷயம்.12-சீசனில் கத்துக்குட்டி அணிகளாகக் களமிறங்கும் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், விண்டீஸ் ஆகிய அணிகள் பலம், பலவீனத்தில் நியூஸிலாந்து அணிக்கு இணையாக இருப்பதால் அரையிறுதி வாய்ப்பு கூட கிடைக்காமல் போகலாம்...
.நாளை பாகிஸ்தான்