tamilnadu

img

அசத்திய இளங்கன்றுகள்

யு-19 உலகக்கோப்பை கால்பந்தில் பிரேசில் சாம்பியன்

தென் அமெரிக்க கண்டத்தின் மிகப் பெரிய நாடான பிரேசிலில் 17-வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 18-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது.   24 நாடுகளைச் சேர்ந்த பயமறியா இளங்கன்றுகளின் அசத்தலான ஆட்டத்தால்  தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த தொடரில் மெக்ஸிகோ, நெதர்லாந்து, பிரேசில், பிரான்ஸ் ஆகிய அணிகள் அரை யிறுதிக்குத் தகுதி பெற்றன.  மெக்ஸிகோ - நெதர்லாந்து அணிகள் மோதிய முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் மெக்ஸிகோ அணி பெனால்டி சூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.  பிரேசில் அணி 3-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை புரட்டியெடுத்து இறுதிக்கு முன்னேறி யது. 

திங்களன்று (இந்திய நேரப்படி செவ்வாய் நள்ளிரவு) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரேசில் - மெக்ஸிகோ அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் 2-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தி 4-வது முறையாகப் பிரேசில் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி 3-ஆம் இடம் பிடித்தது.   இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த யு-17 உல கக்கோப்பை கால்பந்து தொடரின் 19-வது சீசன் 2021-ஆம் ஆண்டு தென் அமெரிக்க நாடான பெருவில் நடைபெறுகிறது.