tamilnadu

img

திருக்கோவலூர் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

திருக்கோவிலூர்,நவ:23 திருக்கோவலூரில் கோவல் தமிழ்ச் சங்க சார்பில் கபிலர் தொடர் ஆய்வ ரங்கம், தேம்பாவணி நூலாசிரியர் வீரமாமுனிவர், உவமைக் கவிஞர் சுரதா ஆகியோர் பிறந்த நாள் என முப்பெரும் விழா சனிக்கிழமை கொண்டாட ப்பட்டது. விழாவிற்கு தமிழ்ச் சங்கச் செயலாளர் பாரதி மணாளன் தலைமை வகித்தார். வரலாற்று ஆசிரி யர் அரங்க குணசேகரன் வரவேற்றார்.     உளு ந்தூர்பேட்டை புலவர் கூ.பிச்சைப்பிள்ளை, ஊராட்சிய ஒன்றிய நடு நிலைப் பள்ளித் தலைமை யாசிரியர் கு.நெடுஞ்செழி யன், மறைபோதகர் விக்டர்மேசியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் தொடக்கவுரையாற்றினார்.   சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் மு.கலிய பெருமாள் சுரதாவின் படத்தினைத் திறந்துவை த்துச் சிறப்புரையாற்றினார். கபிலர் கோர்த்த மலர்கள் என்ற தலைப்பில் புலவர் சி.குருராசன், உரை நடை இலக்கியத்தின் தந்தை வீரமாமுனிவர் என்ற தலைப்பில் அருள்நாதன் தங்கராசு, புதுமைக்கவிய ரங்கில் உவமைக்கவிஞர் சுரதாவும் மூ பனப்பாக்கம் சீத்தாவும் என்ற தலைப்பில் தமிழ்ச்சங்கத் தலைவர் கவிஞர் சிங்கார உதியனும் பேசினர். 

;