கரூர், ஜன.31- 30 மாதங்கள் முடிந்தும் வங்கி ஊழியர்க ளின் ஊதிய உயர்வு கோரிக்கைகள் உடனடி யாக பேசி முடிக்கப்படாததை கண்டித்தும், உடனடியாக பேச்சு வார்த்தை துவக்கப்பட்டு கோரிக்கைககளை நிறைவேற்ற வேண்டும் எனவும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைககளை கண்டித்தும் அகில இந்திய அளவில் ஜன.31, பிப்ரவரி 1 அன்று அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வேலை நிறுத்தம் நடை பெறுகிறது. இதனால் கரூர் மாவட்டத்தில் வங்கிப் பணிகள் முற்றிம் முடங்கின. வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக கரூர் பாரத வங்கி கிளை முன்பு, கரூர் வைசியா வங்கி ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஐ.வெங்கடேசன் தலை மையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜி.பி.எஸ்.வடிவேலன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். வங்கி தொழிற் சங்களின் தலைவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.