tamilnadu

img

ரூ.5 ஆயிரம் நிவாரணம் கேட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

கரூர், மே 10- ஊரடங்கு உத்தரவால் வாழ்வா தாரம் இன்றி முடங்கிக் கிடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவியாக ரூ 5 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் அர வக்குறிச்சி ஒன்றிய குழு சார்பில் குடி யேறும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு நாவல்நகர் கிளைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.வி.கணேசன் கண்டன உரையாற்றி னார். மாவட்டக்குழு உறுப்பினர் கே.வி.பழனிசாமி, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராஜா முகமது, கரூர் மாவட்ட ஆட்டோ தொழி லாளர் சங்க அரவக்குறிச்சி ஒன்றிய தலைவர் எம்.ஆறுமுகம், எம்.காந்தி, ஜி.தங்கபாண்டி மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;