சிதம்பரம், மே 13- சிதம்பரம் தாலுகாவில் உள்ள பாசிமுத்தான் ஓடை யில் வடக்கு தில்லைநயக புரம் அருகில் உள்ள குருமா திட்டு ஷட்டர் உடைந்து கிட்டத்தட்ட இருபது வரு டங்களுக்கு மேலாகிறது. இதனால் மீதிகுடி வாய்க்கால் மற்றும் குருமாந்திட்டு வாய்க்காலுக்கு செல்ல வேண்டிய நீர் விவசா யத்திற்கு பயன்படாமல் வீணாகிறது. இதனை சுற்றியுள்ள சுமார் 1,800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாழாகி மானா வாரி நிலமாக மாறிவிட்டன. வடக்கு தில்லைநயக புரம், பள்ளிப்படை, காரப் பாடி, கோவிலாம்பூண்டி, சி. கொத்தங்குடி, மீதிகுடி, சிதம்பரநாதன்பேட்டை, நவாப்பேட்டை, குண்டுமேடு ஆகிய கிராமங்கள் மீதிகுடி வாய்க்காலால் பயன்பெற்று வந்தன. இந்த ஷட்டர் சீரமைக்கப் பட்டால் சுமார் 12,000 விவ சாயக் குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்கள் பயன் பெறு வார்கள். மேற்குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள கால் நடைகள் ஆற்று நீர் இல்லாத காரணத்தினால் குடிக்க நீரின்றி உயிரிழக்க நேரிடு கிறது. வாய்க்காலில் பாச னத்திற்கு பயன்பட வேண் டிய தண்ணீர் வீணாவதால் இந்த பகுதியில் உள்ள விவ சாயிகள் வேதனை அடைந் துள்ளனர். எனவே பொதுப்பணித் துறை அதிகாரிகள் இதை சீர மைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அந்த பகுதி விவ சாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.