டெங்குவை தடுக்க நடவடிக்கை: வாலிபர் சங்கம் கோரிக்கை
புதுச்சேரி, அக். 20- டெங்கு காய்ச்சலை தடுக்க புதுச்சேரி மாநிலம் உழவர்கரை பகுதி முழுவதும் தேங்கியுள்ள கழிவுநீர் அடைப்பு களை சரி செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி உழவர்கரை நகரக்குழு பேரவைக் கூட்டம் லாஸ்பேட்டை யில் நடைபெற்றது. பிரதேசக் குழு உறுப்பினர் சுரேஷ் தலைமை தாங்கினார். சங்கத்தின் பிரதேசத் தலைவர் ஆனந்த், செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். உழவர் கரை நகர குழு தலைவராக சஞ்சய், செயலாளராக வினோத் குமார், பொருளாளராக நிலவழகன் உட்பட 11 பேர் கொண்ட புதிய நகரகுழு தேர்வுசெய்யப்ப ட்டது. புதுவையில் இயங்கிவரும் அனைத்து தொழிற்சாலைகள், மென் பொருள் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவன வேலை வாய்ப்பில் உள்ளூர் இளைஞர்க ளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், அனைத்து தொழி லாளர்களுக்கும் அடிப்படை ஊதியமாக ரூ.18000 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. புதுச்சேரி உழவர்கரைக்குட்பட்ட நீர் நிலைகளை தூர்வாரவேண்டும், கொசுக்களால் பரவும் மர்ம நோய்களை தடுத்து மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.
கடலில் மூழ்கி மீனவர் சாவு
கடலூர், அக். 20- கடலூர் அருகே உள்ள சோனாங்குப்பத்தைச் சேர்ந்தவர் சு.ஜானகிராமன் (48), மீனவர். வழக்கமாக கட்டுமரத்தில் இரவில் மீன் பிடிக்கச் சென்று விட்டு அதிகாலையில் கரைக்குத் திரும்புவது வழக்கம். அதன்படி சனிக்கிழமை யன்று மீன்பிடிக்கச் சென்றவர் ஞாயிற்றுக்கிழமை(அக்.20) கரை திரும்பாததால் சக மீனவர்கள் அவரைத் தேடினர். இந்நிலையில், காலையில் அவரது கட்டுமரம் மற்றும் வலை ஆகியவை சோனாங்குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியது. மதியம் அவரது உடல் துறைமுகம் முகத்து வாரத்தில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து, கடலூர் துறைமுகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரது சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.