அந்த காலத்தில் 90 வயதான முதியவர்கள் கூட, ஆஸ்பத்தி ரிக்குப் போனதில்லை, ஒரு ஊசி கூடப் போட்டதில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் இன்று பிறந்த குழந்தை முதல் மருத்துவத்துடனும், நோயுடனும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. நம் வாழ்க்கை முறை மாறிவிட்டது. உடல் உழைப்பு குறைவு, எங்கு செல்வதாக இருந்தாலும் வாகனப் பயணம், எனவே நடந்து செல்லும் நிலை இல்லை, உணவுப் பழக்கம், இன்று உண்ணும் உணவில் விஷமும் கலந்தே இருக்கிறது. நோய் அதுவாக வரும் என்ற நிலை இல்லை, நாமே நோயை வரவழைத்துக் கொள்ளும் வாழ்க்கை முறைதான் இப்போது உள்ளது. எனவேதான் முன்னோர்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் நம் உடல்நிலை மீது கவனம் செலுத்த வேண்டும். சிறு அலட்சியம் பெரிய விபத்தில் போய் முடிந்துவிடும். அதேபோல் இன்று என்பதை நாளை என ஒத்திப் போடுவதும் இழப்பை ஏற்படுத்தும். உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவரைப் போய் பார்க்காமல் அவர்களாகவே மருந்துக்கடைக்குச் சென்று மாத்திரை வாங்கிப் போட்டுக் கொள்வது ஆபத்தானது.
உலகில் எந்த தொழில் அதிகமாக இருக்கிறது என்று நண்பர் ஒருவர் கேட்டார், நான் கூட, உலகில் கோடிக்கணக்கானவர்கள் விவ சாயத்தை நம்பி வாழ்வதால் விவசாயம்தான் அதிகமாக உள்ளது என்றேன். ஆனால் அதற்கு அந்த நண்பர், இல்லை உலகில் மருத்து வம்தான் அதிகமாக உள்ளது என்றார். ஏனென்றால் யாருக்கேனும் ஏதேனும் பிரச்சனை என்று சொன்னால் உடனே ஆளாளுக்கு ஒரு வைத்தியம், ஒரு மருந்து என சொல்கிறார்கள். அந்த அளவுக்கு இலவச மருத்துவ ஆலோசனை சொல்லக்கூடியவர்களாக மக்கள் இருக்கிறார்கள் என்பதைத்தான் அந்த நண்பர், உலகிலேயே அதிகமான தொழிலாக மருத்துவம் இருக்கிறது என்று சொன்னார். இப்படி ஆலோசனை சொல்வதைக் கேட்டும், தேவையற்ற நோயை நாமே வரவழைத்துக் கொள்கிறோம். எனவே உடல் நலத்தைப் பேணுவதற்கு நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டும், இடர்பாடு ஏற்படும்போது உடனடியாக மருத்து வரை நாட வேண்டும். இந்த இயக்கத்துக்கு நாம் நீண்ட காலம் உழைப்பதற்கு, அதிக நாள் வாழ்ந்து நாம் பணியாற்ற உடல்நல னைப் பேண வேண்டும்.

தொகுப்பு: வே.தூயவன்