நாமக்கல்லில் வரலாறு காணாத அளவாக ஒரு முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
***************
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத் ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் இளம்பெண் ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்யப்பட்டார்.பாதிக்கப்பட்ட பெண் வசித்த கிராமத்திற்கு போலீசார் சீல்வைத்துள்ளனர். அந்தப் பெண் ணின் உறவினர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க தடைவிதித்துள்ளது பாஜக அரசின் காவல்துறை.
***************
ஐ.எஸ். அமைப்பின் ஒரு பிரிவுஅல்-ஹிந்த் தென்னிந்தியாவில்தங்களுக்கு என மாகாணத்தை நிறுவ திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
***************
கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.
***************
புதுச்சேரியில் 9 முதல் 12 ஆம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அக்டோபர் 8 ஆம் தேதி முதல்பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார் கள் என்று கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு தெரிவித்தார்.
***************
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களுடன் நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம், அன்டரேஸ் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
***************
கன்னியாகுமரியில் வெள்ளியன்று இரவு 50 அடி தூரத்திற்கு திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் மற்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
***************
ரிலையன்ஸ் சில்லறை வணிக நிறுவனத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ஜிஐசி,5 ஆயிரத்து 512 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
***************
அக்டோபர்16 ஆம் தேதி முதல்மத்திய பட்ஜெட் தயாரிப்புக் கான பணிகளை மத்திய நிதி அமைச்சகம் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
***************
கடலில் விழுந்து மாயமான மீனவரை மீட்கக்கோரி இராமேசுவரம் மீனவர்கள் அக்டோபர் 3 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
***************
இந்திய ஆட்சிப் பணிக்கான (யுபிஎஸ்சி) முதல்நிலைத் தேர்வு இன்று (ஞாயிறு) நடைபெறுகிறது. கொரோனா பரவலால் தேர்வுமையங்களில் ஒரு மேஜைக்கு ஒருவர் என அமரவைக்கப்படுவார் .தனிநபர் இடைவெளி, முகக்கவசத்துடன் தேர்வெழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.