tamilnadu

img

நவீன தொழில்நுட்பங்களில் ‘சிவப்பு புத்தகம்’

உலகின் பல நாடுகளில் ‘சிவப்பு புத்தக தின’ கொண்டாட்டத்துக்கான தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. இப்போதுதான் காரல் மார்க்ஸ் 200 ஆவது ஆண்டை ஒட்டி உலகம் முழுவதும் பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. ஏங்கெல்ஸ் 200 ஆவது நூற்றாண்டு நிறைவு விழா அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து வடித்துக் கொடுத்த கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு மீண்டும் முன்னுக்கு வந்திருப்பது மிகச் சரியான, அவசியமான ஒன்றாகும்.

1848 ஆம் ஆண்டில் இந்த புத்தகம் எழுதப்பட்ட சில வாரங்களில் பாட்டாளிவர்க்கத்தின் குறிப்பிடத்தக்க எழுச்சி நடைபெற்று, பிறகு அது பின்னுக்குச் செல்வதும் நடந்தேறியது. மீண்டும் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த புத்தகம் வெளிச்சத்திற்கு வந்தது. இடைப்பட்ட காலத்தில் பல்வேறு வேட்டையாடல்களையும், அடக்கு முறைகளையும் தொழிலாளி வர்க்க இயக்கம் எதிர்கொண்டது. இவ்வாறு தொழிலாளி வர்க்கம் அவநம்பிக்கையால் துவண்டு போய், பல்வேறு அரசியல் முழக்கங்களால் திசைதிருப்பப்பட்டு, உள்ளுக்குள்ளேயே மோதவைக்கப்பட்டு, பலவீனமாக்கப்படும் தருணங்களில் எல்லாம் அதற்கு புத்துயிரூட்டி, புது நம்பிக்கை பாய்ச்சக் கூடிய புத்தகமாக கம்யூனிஸ்ட் அறிக்கையே இருந்துவருகிறது. 

கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதப்பட்ட காலத்தை விடவும் மிக மிக அதிக எண்ணிக்கையில் தொழிலாளி வர்க்கம் பல்கிப் பெருகியிருக்கிறது. விவசாயிகளாக, விவசாயத் தொழிலாளர்களாக, நடுத்தர வர்க்கத்தாராக, குட்டி முதலாளிகளாக இருந்த பல்வேறு வர்க்கத்தார் தங்கள் உடைமைகளை இழந்து பாட்டாளி வர்க்கப் படையணியில் சேர்ந்துள்ளார்கள். உலகின் செல்வக் குவிப்பு அதிகரித்துக் கொண்டே வரும்போது, இன்னொரு பக்கத்தில் ஓட்டாண்டிகளாக, வேலையற்றோராக மிகப்பெரும் பகுதியினர் உருவாக்கப்படுகின்றனர். இந்த நிலைமைகளை புரட்சிகரமாக மாற்றியமைக்கும் வல்லமையுள்ள பாட்டாளி வர்க்கத்தின் கைகளில், கம்யூனிஸ்ட் அறிக்கையும், மார்க்சியத் தத்துவத்தையும் சேர்ப்பது நம் கடமை.

அனைத்து நவீன வடிவங்களிலும் கம்யூனிஸ்ட் அறிக்கையின் தற்காலத் தமிழ் மொழியாக்கம் மாற்றப்படுகிறது. செயலி வடிவில் அறிக்கையை பெறுவதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் ஆயசஒளைவ டுiசெயசல என தேடி ஏற்றிக்கொள்ளலாம். கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதல் அத்தியாயம், சிவப்பு புத்தக தின அமர்வுகளில் வாசிக்கப்படவுள்ளது. அதற்காக ஒலிப் புத்தகம் இலவசமாக வெளியிடப்பட்டுள்ளது. Marxist Reader செயலியை ஏற்றிக் கொள்வதன் மூலம் இந்த ஒலிப் புத்தகத்தை கேட்க முடியும்.  

இணையதள முகவரி: marxist.tncpim.org/communist-manefesto-tamil-audio-bookகம்யூனிஸ்ட் அறிக்கையை கற்போம், பரவலாக்குவோம்.