tamilnadu

img

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து

விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்

தருமபுரி, ஜூலை 25-  அரூர் அருகே எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் - சென்னை வழியாக ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து, திட்டம் நிறை வேற்றிடத் தேவையான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டது. இதற் காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலம் கையகப்ப டுத்தும் பணியை தமிழக வருவாய்த் துறை மேற்கொண்டு வருகிறது.  அதேநேரம், இந்த எட்டு வழிச் சாலை திட்டத்தில் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள், நீர்நிலைகள், மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங் கள் அழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள் ளது. ஆகவே, இத்திட்டத்தை நிறை வேற்றக் கூடாது என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் மேற்கொண்டு வரு கின்றனர். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலை யால் பாதிக்கப்படும் விவசாயிகள் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி மனு தாக்கல் செய்தனர். இதனைய டுத்து, சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைக்கான அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய நெடுஞ்சாலைத்துறை உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய் துள்ளது. இந்த மேல் முறையீட்டு மனுவை வாபஸ் பெற வலியுறுத்தி யும்,  எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாலகப்பாடி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சந்திரகுமார் தலைமை வகித்தார். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தனிமனித இடை வெளியைப் பின்பற்றி ஆவேச முழக் கங்ளை எழுப்பினர்.

;