புதுதில்லி, பிப்.25- தில்லியில் செவ்வாயன்று பிரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இடையே நடை பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா -அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடிக்கு ராணுவ ஒப்பந்தம் கையெ ழுத்தானது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், செவ்வாயன்று தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்தியா-அமெரிக்கா இடையிலான பல்வேறு துறை விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். முதலில் டிரம்ப்பும், மோடியும் தனி யாக பேச்சு நடத்தினார்கள். வர்த்தகம், ராணு வம் மற்றும் இரு நாட்டு ராஜீய உறவுகள் குறித்து விவாதித்தனர். இதைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் குழு அளவிலான பேச்சு நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் நிறைவில் இந்தியா- அமெரிக்கா இடையே எரிசக்தி உள்ளிட்ட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் பாதுகாப்பு ஒத்து ழைப்பை மேம்படுத்தும் வகையில் 300 கோடி டாலர் (ரூ.21,606 கோடி) மதிப்பிலான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. டிரம்ப்- மோடி முன்னிலையில் இதற்கான ஒப்பந் தத்தில் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா வின் அப்பாச்சி மற்றும் எம்எச்-60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட நவீன ராணுவ உபகரணங்கள் இந்திய ராணு வத்திற்கு வாங்கப்படுகிறது. எம்.எச்.60 ரோமியோ வகையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்தக் கூடிய சிறப்புகள் கொண் டது. நீண்ட நேரம் பறக்கும் ஆற்றல் வாய்ந்த அந்த ஹெலிகாப்டர்கள் மூலம் கடற்படைக்கு மேலும் வலிமை கொடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.