tamilnadu

img

4 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் அறிவிப்பு

 சென்னை, டிச.3- இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல  சுழற்சி காரணமாக, ராமநாதபுரம், தூத்துக் குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்  டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி  நேரத்துக்கு கனமழை பெய்யக்கூடும் என்று  வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை மற்றும் தென் தமிழக கடற்கரைப் பகுதியில் காற்ற ழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நிலவுவதாக வும், இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி  நேரத்துக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்” என்றார்.

ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும்  அவர் கூறினார். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்த வரையில் நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை  லேசான மழை பெய்யக்கூடும் எனவும் பாலச்சந்திரன் கூறினார். குமரிக் கடல் பகுதி யில் சூறைக் காற்று மணிக்கு 40 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்ப தால், மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு  குமரிக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் பாலச்சந்திரன் கேட்டுக் கொண்டார். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை யில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 13 சென்டி மீட்டர் மழையும், ராமநாதபுரத்தில் 9 சென்டி மீட்டர் மழையும், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.

;