tamilnadu

img

குரூப் 4 முறைகேடு: குற்றவாளி குறித்து துப்பு கொடுத்தால் சன்மானம்

சென்னை,ஜன.31- குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தலைமறை வாகி உள்ள ஜெயக்குமார் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங் கப்படும் என சிபிசிஐடி அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபி சிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகிறது. இதுவரை அந்த வழக்கில் இடைத்தர கர்கள் மற்றும் முறைகேடாக தேர்வு எழுதிய  தேர்வர்கள் உள்பட 14 பேர் கைது செய்யப் பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, வழக்கின் முக்கிய  குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. முகப்பேர் மேற்கில் உள்ள அந்த வீட்டில் நடைபெற்ற சோதனையில், மடிக்கணினி, பென்டிரைவ், 60க்கும் மேற்பட்ட பேனாக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையினரால் கைப்பற்றப்பட்டது.

அந்த ஆவணங்கள் அதிகாரிகளால் பரி சீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஜெயக்குமார் வெளிநாடு தப்பிப் போகாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன.  ஜெயக்குமார் பற்றி தகவல் கொடுப்பவர்க ளுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும்  சிபிசிஐடி அறிவித்துள்ளது. அவரது புகைப்  படம் அச்சிடப்பட்டு மாநிலம் முழுவதும் ஒட்டப்  பட்டுள்ளதுடன், தகவல் தர பிரத்யேக தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

;