செய்தி:- ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 6 உயர்வு.
ச.சா - கேட்டா விலைவாசியா.. எங்க உயர்ந்துச்சுனு கேப்பாங்க..??
மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்:- 370வது பிரிவு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருந்த தற்காலிகப் பிரிவே என்பதை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ச.சா - ஆனா அது நிரந்தர அமைதிக்கானது என்பது உங்களுக்கு புரியலையே?
செய்தி :- பாகிஸ்தானுக்கு தரவிருந்த ரூ.3,100 கோடி நிதியுதவியை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு.
ச.சா - 29 ஆயிரம் கோடி ரூபாய் குடுக்கப் போறாங்க.. அதுதான் செய்தி..!!
செய்தி :- தகுதி நீக்கம் செய்யப்பட்ட தில்லி எம்.எல்.ஏ., பாஜகவில் சேர்ந்தார்.
ச.சா - எல்லா மாநிலத்துலயும் அடுத்த கட்சிய சீர்குலைக்குற வேலைய திட்டமிட்டு செய்யுறாங்களே..??