tamilnadu

img

தமிழகம் வரும் சீன ஜனாதிபதி: கண்காணிப்பு தீவிரம்

சென்னை,அக்.8- சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வருகிற  11ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு  வருகை தருகிறார். பெய்ஜிங்கி லிருந்து சென்னை வரும் சீன ஜனாதிபதி, மாமல்லபுரத்தில் பிரதமர்  நரேந்திர மோடியை சந்தித்துப் பேசு கிறார். பின்னர், மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை  இருவரும் பார்வையிடுகின்றனர். இதனால், மாமல்லபுரத்தில் முக்கிய  சுற்றுலா தலங்களும், காவல்துறை யின் தீவிர கண்காணிப்பின் கீழ்  கொண்டுவரப்பட்டுள்ளன. வெடி குண்டு நிபுணர்கள் 5 குழுக்களாக  பிரிந்து, மோப்பநாய் உடன், தணிக்கை பணிகளை தீவிரப்படுத்தி யுள்ளனர்.

இரு நாட்டுத் தலைவர்களை வர வேற்பதற்காக தமிழக அரசு சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். பணிகளை தொடர்ந்து கண்காணிப்பதற்காக செங்கல்பட்டு கோட்டாட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அதி காரிகள் 24 மணி நேரமும் கண்கா ணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ள னர். மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற  மீனவ கிராமங்களிலும் காவலர்கள்  தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வரும் வாகனங்களின் பதிவெண்கள், செல்போன் எண் உள்ளிட்ட விவ ரங்களை பதிவு செய்த பின்னரே அனுமதிக்கின்றனர். மேலும், துப்பாக்கி ஏந்திய காவலர்கள்  ரோந்து பணியில் உள்ளனர். 

பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா தலங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட சிற்பங்களின் வளா கத்தின் உள் செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனு மதியில்லை என காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியர் பொன்னையா உத்தர விட்டுள்ளார். இரு நாட்டு தலைவர்க ளும் சந்திக்கும் இந்நிகழ்ச்சி முடி யும் வரையில் இந்த உத்தரவு தொட ரும் மற்றும் மேற்கண்ட சுற்றுலா தல  வளாகங்கள் தொல்லியல்துறையின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

;