tamilnadu

img

முறையாக பராமரிக்கப்படாத ரத்தத்தை பயன்படுத்தியதால் 15 பெண்கள் பலி

சென்னை,

தமிழகத்தில் 3 அரசு மருத்துவமனைகளில் 4மாதங்களில் மட்டும் முறையாக பராமரிக்கப்படாத ரத்தம் செலுத்தப்பட்டதால் 15 பெண்கள் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தருமபுரி, ஒசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சீனியர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு உற்பட்ட ரத்த வங்கிகள் முறையாக 2டிகிரி செல்சியஸ் முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பராமரிக்கப்படாத கெட்டுப்போன ரத்தத்தை நல்ல நிலையில் உள்ள ரத்தம் என்று சான்று வழங்கி உள்ளனர். அந்த ரத்தம் செலுத்தப்பட்டவர்களில் 4 மாதங்களில் மட்டும் (2019ஜனவரிக்கு முன்) சுமார் 15 பெண்கள் உயிரிழந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு காரணமான ரத்த வங்கியின் அதிகாரிகள் மருத்துவர் எம். சந்திரசேகர், மருத்துவர் நாராயணசாமி(கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை), மருத்துவர் சுகந்தா ( ஒசூர் அரசு மருத்துவமனை) மீது மாவட்ட சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்புடை 13 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இதுபோல எச் ஐ வி நோய் தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக அவரது குழந்தைக்கு எச்ஐவி நோய் பரவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

;