tamilnadu

img

இந்தியா ஹிந்து நாடல்ல, மதச்சார்பற்ற நாடு உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு

இந்து முன்னணியின் வழக்கு தள்ளுபடி

சென்னை,ஏப்.28-  இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீது, இந்தியா ஓர் இந்து நாடல்ல என்றும், இந்தியா மதச்சா ர்பற்ற நாடு என்றும் திட்டவட்டமாக தீர்ப்பு வழங்கிய இரு நீதிபதிகள் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பினை திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி  வரவேற்று, பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் உள்ள இந்து முன்னணி என்ற அமைப்பினர், தமிழ்நாடு அரசு ஏழை இஸ்லாமி யர்களுக்கு நோன்புக் கஞ்சிக்காக 5,460 டன் பச்சரிசியை வழங்கக்கூடாது என்று - அதன் செயலாளர் குற்றாலநாதன் என்பவர் மூலம் பொதுநல வழக்கு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் போட்டுள்ளனர்.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, இந்து முன்னணி பதிவு செய்யப்பட்ட அமைப்பா? என்று கேட்ட கேள்விக்கு, வாதாடிய வழக்கறிஞர் சரியான பதிலை அளிக்க முடியாத நிலையில், தனி நபர் வழக்காக வாதாடப்பட்டது. 

ஹிந்து முன்னணியினரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது!

அத்தீர்ப்பில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; அது ஒரு ஹிந்து நாடு அல்லவென்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியதோடு, 1947 நாடு பிரிவினையின்போது அதனால்தான் நம் நாடு பல சோதனை களையும் கூட நிதானத்துடன் தீர்க்க முடிந்தது என்று குறிப்பிட்டு, இலவசமாக இஸ்லாமி யர்களுக்கு நோன்புக் கஞ்சி க்கான அரிசி வழங்கக் கூடாது என்ற ஹிந்து முன்னணியின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று இந்தக் கோரிக்கையைத் தள்ளுபடி செய்துள்ளனர். இதை வரவேற்றுப் பாராட்டுகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
 

;