tamilnadu

img

இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய இடைக்கால தலைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 
தஞ்சாவூரில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ‘ராஜராஜ சோழன் காலத்தில்தான், மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும், ராஜராஜ சோழனின் காலம்தான் இருண்ட காலம்’ என்றும் கருத்து தெரிவித்தார்.  அவருடைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இயக்குநர் பா. ரஞ்சித் முன் ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். 
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தனது பேச்சு மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தவில்லை என்றும், வரலாற்று ஆய்வின் அடிப்படையில் கருத்து தெரிவித்ததாகவும் ரஞ்சித் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி, ரஞ்சித்தை, வரும் 19-ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  முன்ஜாமின்கோரி பா. ரஞ்சித் தாக்கல் செய்த மனுமீது இன்று நீதிபதி ராஜமாணிக்கம் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குநர் ரஞ்சித்தை கைதுக்கு ஏற்கனவே விதித்திருந்த தடையை வெள்ளிக்கிழமை வரை நீடித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 

;