காட்டுமிராண்டித்தமாக நடக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
ஈரோடு, நவ. 4- காத்திருக்கும் போராட்டத்தில் ஈடு பட்டவரை காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினருமான வ.இளங்கோ கடந்த ஜூலை 18 ஆம் தேதியன்று விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து ஈரோடு சம்பத் நகரில் நடைபெற்ற காத்தி ருக்கும் போராட்டத்தில் கலந்து கொண் டார். இதில் அவரை கைது செய்யும் பொழுது சாலையில் தரதரவென இழுத்து சென்றதில் கை, கால்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டு உடல் நலக்குறைவின் காரணமாக பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார், ஈரோடு வடக்கு காவல் ஆய்வாளர் உட் பட மூன்று காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதி காரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில் திங்களன்று புகார் மனு வின் அடிப்படையில் ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் வ.இளங்கோ மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளித்தார்.
உதகையில் வீடுகள் கட்ட விதிக்கப்பட்ட தடையைத் திரும்பப் பெறுக நவ.27ல் ஆட்சியர் அலுவலகத்தை சிபிஎம் முற்றுகையிட முடிவு
உதகை, நவ. 4- நீலகிரி மாவட்டம் முழுவதும் 283 இடங்களில் வீடுகள் கட்ட விதிக் கப்பட்ட தடை உத்தரவை உடனடி யாக திரும்பப் பெற வலியுறுத்தி நவ.27 ஆம் தேதியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிடும் போராட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட செய லாளர் வி.ஏ.பாஸ்கரன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது, அண்மையில் நீலகிரி மாவட்டத் தில் 283 பகுதிகளில் இனி வீடுகளை கட்டக்கூடாது என மாவட்ட ஆட்சியர் பெயரில் ஒரு உத்தரவு வெளியிடப்பட் டுள்ளது. இந்த உத்தரவால் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே தேயிலை தொழில் மந்தமான சூழலில், மாவட்டத்தின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. மலைக்காய்கறிகளுக்கு கட்டுபடியான விலையில்லை, சுற்றுலா தொழிலும் நெருக்கடியை நோக்கி செல்லும் இத்தகைய சூழலில் பிறப்பிக்கப்பட் டுள்ள இந்த உத்தரவு மாவட்ட மக்களை மேலும் மோசமான நிலைக்கு தள்ளிவிட்டதோடு, மாவட்டமே ஒரு திறந்த வெளி சிறைச்சாலையோ என எண்ணுமளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. எனவே மாவட்ட மக்களின் வாழ் வாதாரங்களை கணக்கில் கொண்டு, மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப் பட்ட ஆணை 20458 / 09.10.2019 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டு மெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக்குழுவின் சார்பில் கேட்டுக் கொள்வதோடு, வீடு கள் கட்ட தடை செய்யும் இந்த ஆணையை கண்டித்து வருகிற நவம் பர் 13 ஆம் தேதியன்று வருவாய் தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டமும், நவம்பர் 27 ஆம் தேதியன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட மக்கள் நலனை பாதுகாக்கும் கோரிக்கையோடு நடைபெறும் இவ் வியக்கங்களுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டு மெனவும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.