ஈரோடு, செப். 25- தலித் மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர் பான உண்மையை கண்டறியக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் செவ்வாயன்று அந்தியூர் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் மைக்கேல்பாளையம், கழுதப் பாளியைச் சேர்ந்த தலித் சமூ கத்தைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஓவியா (14), 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி சுகந்தி (15) ஆகியோர் கடந்த ஜனவரி 1ஆம் தேதியன்று புத்தாண்டை முன்னிட்டு கோவி லுக்கு சென்று வருவதாக கூறி விட்டுச் சென்றனர். ஆனால் இரு நாட்கள் கடந்த பின்னும் இரு மாணவிகளும் வீடு திரும்பாத நிலையில், பவானி ஆற்றில் சட லமாக மீட்கப்பட்டனர். பின்னர் இருவரது உடல் பிரேத பரிசோ தனை செய்யப்பட்டு, சந்தேக மர ணம் என ஆப்பக்கூடல் காவல் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 9 மாதங்கள் கடந்த பின்னும் இரு மாணவிக ளின் மரணத்திற்கான கார ணத்தை காவல்துறையினரால் கண்டு பிடிக்க முடியவில்லை. முன்னதாக, இம்மாணவிகள் பவானி ஆற்று (அத்தாணி பாலம் அருகில்) மணலில் நிற்க வைத்து செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ள னர். மேலும் சில இளைஞர்கள் இம்மாணவிகள் பள்ளிக்கூடம் செல்லும் போது பின் தொடர்ந்து சென்று இடையூறுகள் செய்த தாக எழுந்த புகாரின் அடிப்படை யில், இளைஞர்கள் சிலரிடம் பவானி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற் கொண்டு, எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி உள்ளனர். எனவே, இம்மாணவிகளின் மரணம் குறித்து பவானி காவல் துறை துணைக் கண்காணிப் பாளரிடம் பலமுறை புகார் செய் தும், விசாரணையில் எவ்வித முன் னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, தமிழக அரசு மாணவிகள் ஓவியா மற்றும் சுகந்தி மரணத்தின் காரணத்தை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வுத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அந் தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீ.ஒ.முன்னணியின் தாலுகா தலைவர் ஏ.முருகன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் எம்.அண்ணாதுரை, மாவட்டச் செயலாளர் பி.பி.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், விவசாய தொழி லாளர் சங்க தாலுகா செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மா.ஆறுமுகம், விசிக மாநில வணிகரணி துணைச் செயலாளர் கு.ஈஸ்வரன், த.தீ.ஒ. முன்னணி தாலுகா செயலாளர் ஏ.கே.பழனிசாமி, ஆதித்தமிழர் பேரவை ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் மா.ஆறுமுகம், ஒன் றிய செயலாளர் டி.ராஜா, மாதர் சங் கத்தின் எஸ்.ராதா, சிபிஎம் கிளைச் செயலாளர்கள் ஆர்.கணேசன், ஜி.செங்கோடு மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.