tamilnadu

img

பாகிஸ்தானில் மேலும் 1,900 பேருக்கு கொரோனா...  

இஸ்லாமாபாத் 
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. அந்நாட்டின் முக்கிய நகரான கராச்சி, லாகூர் ஆகிய பகுதிகள் கடும் சேதாரத்தைச் சந்தித்துள்ளது. இரண்டு நகரங்களுமே இளஞ்சிவப்பு நிறத்தைப் பெற்று இயல்பு நிலையை இழந்துள்ளது. 

ஒருபக்கம் கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருந்தும் அந்நாட்டு அரசு ஊரடங்கு தளர்வு பற்றி அதிகம் யோசித்து வருகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பாகிஸ்தானில்  1,932 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்மூலம் பாகிஸ்தானில் மொத்த கொரோனா பாதிப்பு 45 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் 45 பேர் பலியாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 985 ஆக உயர்ந்துள்ளது. 13 ஆயிரம் பேர் கொரோனாவை வென்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் உலகில் கொரோனாவால் பாதிக்கப்படும் ஒவ்வொரு நாடும் தனது தலைநகரை கொரோனவாலிருந்து மீட்கக் கடுமையாகப் போராடி வருகிறது.ஆனால் பாகிஸ்தான் நாடு தனது தலைநகர் இஸ்லாமாபாத்தை ஆரஞ்சு மண்டலத்தில் வைத்து அழகு பார்த்து வருகிறது. அங்கு வெறும் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;