tamilnadu

இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு

கொழும்பு, ஏப்.24-இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள்தகர்க்கப்பட்டன. பிரார்த்தனைக் காக தேவாலயங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கொத்துக் கொத்தாக உயிரிழந்த னர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் செவ்வாக்கிழமை மாலை நிலவரப்படி, 321 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டி ருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் பலர் உயிரிழந்தனர். புதன்கிழமை காலை நிலவரப்படி உயிரிழப்பு 359 ஆக உயர்ந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக 40 பேர் ஏற்கனவே கைது செய்யப் பட்ட நிலையில், செவ்வாயன்று இரவுமேலும் 18 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார். இதனால், வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தகவல் தெரிவிக்கவில்லை


இலங்கையில், பயங்கரவாதி கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய உளவுத்துறை தகவல் பரிமாறியதாகவும் ஆனால், அதை பொருட்படுத்தாததே இந்த பெருந்துயரத்திற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. உளவுத்தகவல்களை புறக்கணித்த தற்காக மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது. இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த சம்பவத்தினை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது, குண்டுவெடிப்பு பற்றிய உளவுத் துறை தகவலை தனக்கு முன்பே தெரிவிக்கவில்லை. தகவல் கிடைத்திருந்தால் தேவை யான நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றார்.


குடும்பத்தை இழந்த இங்கிலாந்து தொழில் அதிபர் 


இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் இங்கிலாந்தை சேர்ந்த 8 பேர் பலியாயினர். அவர்களில், சட்ட நிறுவனம் ஒன்றின் பங்கு தாரரான பென் நிக்கல்சன் என்பவ ரின் மனைவி அனிதா (42), மகன்அலெக்ஸ்(14), மகள் அன்ன பெல்(11) ஆகியோரும் அடங்கு வர். இவர்கள் சிங்கப்பூரில் வசித்து வந்தனர். விடுமுறையை கழிப்பதற்காக, இலங்கைக்கு வந்தனர். தி ஷாங்கிரி லா ஓட்டலில் தங்கி யிருந்த அவர்கள், அங்குள்ள உணவுவிடுதியில் அமர்ந்திருந்த போது தான் குண்டு வெடித்தது. இதில்,பென் நிக்கல்சன் உயிர் தப்பினாலும், மனைவி, மகன், மகள் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.


தாக்குதலின் முக்கியப் புள்ளி


இலங்கை தற்கொலைப் படைத்தாக்குதலுக்கு அந்நாட்டைச் சேர்ந்த மதகுரு ஜஹ்ரான் ஹஷிமுக்கு முக்கியத் தொடர்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் பல்வேறு இடங்களில் தனது பெயரை ஹஷிம் என்றும், ஹஷ்மி என்றும் மாற்றி வைத்துள்ளார் என இலங்கை காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியர்களின் உடல்களை அனுப்ப ஏற்பாடு


இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள் 10 பேரில் 9 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. உயிரி ழந்தோரின் உடல்கள் நான்கு தனித்தனி விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் உயிரி ழந்தோரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தாக்குதல் நடத்திய பட்டதாரி


இந்தத் தற்கொலை தாக்குதல் நடத்திய நபர் ஆஸ்திரேலியாவில் படித்தவர், இவரது தந்தை இலங்கை வர்த்தகர் ஒருவரின் மகன் என தெரிய வந்துள்ளது. 

;