tamilnadu

img

அரசுப் பள்ளிகளில் இணைய வழி கற்றல்

மேலூர், மே12- வேலூரிலிருந்து 1464 பேர் சிறப்பு ரயில் மூலம் மேற்கு வங்கம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஊரடங்கிற்கு முன்னதாக வடமாநிலத்திலி ருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலூருக்கு வந்துள்ளனர். மேலும் சிலர் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவம னைக்கும் வந்துள்ளனர்.  ஊரடங்கு பிறப்பிக்கப்பட் டதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.\

இதையடுத்து தற்போது வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள்,சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  அந்த வகையில் மேற்கு வங்கத்திலிருந்து வந்து வேலூரில் சிக்கிக்கொண்ட 1464 பேர், மே 12ஆம் தேதி 12 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு முன்னதாக 6, 8, 9, 11ஆம் தேதிகளில் ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.  இதுவரை வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 6,094 பேர் தமிழக அரசின் செலவில் சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

 

;